உலகின் பழமையான நாடு குறித்து புதிய தகவல்
1 லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழும் நாடு குறித்து ஆய்வு வெளிப்படுத்தியது
உலகின் மிகப் பழமையான நாடு எது? புதிய ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்
உலகின் எந்த பகுதியில் மனிதர்கள் முதன்முதலில் குடியேறி நாகரிகத்தை உருவாக்கினர் என்பது குறித்து நூற்றாண்டுகளாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
பழமையான நாகரிகம் தங்களுடைய நாட்டில்தான் தோன்றியது என்ற பெருமையை உலகின் பல நாடுகள் கொண்டிருந்தாலும், சமீபத்திய உலக மக்கள்தொகை மதிப்பாய்வு அறிக்கை இந்த விவாதத்திற்கு முற்றிலும் புதிய திருப்பத்தை வழங்கியுள்ளது.
இந்தியா பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நாடு என்று பலர் கருதும் நிலையில், இந்த ஆய்வு மனிதர்கள் இதைவிட மிக நீண்ட காலம் வாழ்ந்து வந்த நாடு உலகில் இருப்பதை குறிப்படுகிறது.
பண்டைய பெர்சியா என அழைக்கப்பட்ட நவீனகால ஈரானே உலகின் மிகப் பழமையான நாடு என்று இந்த கணக்கெடுப்பு கூறுகிறது. அதிலும் ஆச்சர்யமாக, இங்கு மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாக வரலாற்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கிமு 3200 முதல் கிமு 539 வரை நிலவி வந்த எலாமைட் பேரரசின் மையப்பகுதி இன்று ஈரானின் தென்மேற்கு பகுதிகளாகவும் தெற்கு ஈராக்கின் சில பகுதிகளாகவும் உள்ளது. இதுவே உலகின் முதல்கால நாகரிகங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் இந்தியா உலகின் இரண்டாவது பழமையான நாடாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிமு 2000-ம் ஆண்டிலிருந்தே மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் மூன்றாவது இடத்தில் சீனா இடம்பெற்றுள்ளது; இந்தியாவைப் போலவே சீனாவும் மிகப் பழமையான தொடர்ச்சியான நாகரிகத்தின் வரலாற்றைக் கொண்டதாக இவ்வாய்வு விளக்குகிறது.
மனித நாகரிக வளர்ச்சி குறித்த ஆய்வுகள் இன்னும் தொடரும் நிலையில், எதிர்காலத்தில் புதிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதால் இந்த பட்டியல்களும் மாற்றம் அடையலாம்.
ஆனால் தற்போதைய அறிக்கை உலகின் உண்மையான பழமையான நாடு குறித்து உலகளவில் பெரிய ஆர்வத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|