டென்மார்க் கடும் முடிவு - சமூக வலைத்தளத்திற்கு தடை
15 வயதுக்கு குறைவானவர்களுக்கு டென்மார்க் சமூக வலைதள தடை
குழந்தைகளை பாதுகாக்க டென்மார்க் அரசு புதிய சட்டம்:
டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 13 வயது குழந்தைகளுக்கு பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தும் வசதியும் பரிசீலிக்கப்படுகிறது.
டென்மார்க் டிஜிட்டல் விவகார அமைச்சர் காரலின் ஸ்டேஜ் கூறுகையில், 13 வயதுக்கு குறைவான குழந்தைகளில் 94% பேர் ஏற்கனவே குறைந்தது ஒரு சமூக வலைதளத்தில் கணக்கை வைத்திருக்கின்றனர். குழந்தைகள் ஆன்லைனில் சந்திக்கும் வன்முறை, தீங்கான உள்ளடக்கம் மற்றும் வணிக அழுத்தம் குறித்து கவலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டம் உடனடியாக அமலுக்கு வராது; ஆனால் டென்மார்க் இதற்கான சட்டங்களை விரைவாகவும் சரியான கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் தடை அமல்பட்டால், TikTok, Facebook, Instagram போன்ற தளங்கள் சரியான வயது சரிபார்ப்பை செய்யவில்லை என்றால், அவற்றுக்கு உலகளாவிய வருமானத்தின் 6% வரை அபராதம் விதிக்கப்படும்.
டென்மார்க் தனது தேசிய டிஜிட்டல் அடையாள (Electronic ID) முறையைப் பயன்படுத்தி வயது-சரிபார்ப்பு செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதள தடை சட்டத்தை முதன்முதலாக அமல்படுத்தியது; டென்மார்க் இதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது.
“பேறுகள், ஆசிரியர்கள் மட்டும் குழந்தைகளை காக்க முடியாத நிலை. இப்போது அரசே நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல்,” என்று டென்மார்க் அரசு கூறியுள்ளது.